விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க தொடங்கும். எதிர்பார்க்கும் உதவிகள் விரைவில் கிடைக்கும். புதிய முயற்சிகள் ஏதேனும் செய்ய விரும்பினால் தாராளமாக செய்யலாம். குடும்ப நபர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். நெருங்கிய உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கவும். மன அமைதி பெரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எப்போதும் கவனம் தேவை. கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதின் மூலம் செலவுகள் கூடும். குடும்பத்தில் விருந்தினர் வருகை இருக்கும். வாழ்க்கைதுணையின் உடல் நிலையில் கவனம் தேவை. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com